தினமும் பல் துலக்கிய பிறகும் இரவு உணவு உட்கொண்ட பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை மற்றும் பல் ஆரோக்கியம் மேம்படும்.தொண்டையில் புண் இருந்தால் கல் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பாக்டீரியாக்கள் அழிந்து புண்கள் ஆறும்.
உணவு உட்கொண்ட பிறகு பற்களில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டிருக்கும்.இதை அகற்ற நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.உப்பு கலந்து நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த நீரில் வாயை கொப்பளித்தால் வாயில் உள்ள நோய் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உப்பு கலந்த நீரில் வாயை சுத்தம் செய்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.உப்பு காலாந்த நீரை கொதிக்க வைத்து சுவாசித்தல் சளி,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் குணமாகும்.
வறட்டு இருமல் பிரச்சனை இருப்பவர்கள் உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.நீங்கள் தினமும் உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தீர்கள் என்றால் சுவாச மண்டல நோய்த்தொற்றுகள் அனைத்தும் குணமாகும்.
உங்களுக்கு தொண்டை அரிப்பு,தொண்டை கரகரப்பு பிரச்சனை இருந்தால் உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
உப்பு நீர் தயாரிப்பது எப்படி?
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.ஒரு நிமிடம் சூடாக்கினால் போதுமானது.இந்த நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கரையவிடவும்.பிறகு வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்ததும் வாயை கொப்பளிக்க வேண்டும்.