அதிக கொழுப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை முறையாக பின்பற்றவும்.
தீர்வு 01:
1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
2)கற்கண்டு சிறிதளவு
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு கற்கண்டு சேர்த்து பருகினால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
தீர்வு 02:
1)ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் ஒரு கிளாஸ்
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்செரிச்சல் கட்டுப்படும்.
தீர்வு 03:
1)கற்றாழை ஒரு துண்டு
2)தண்ணீர் ஒரு கிளாஸ்
ஒரு துண்டு கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும்.பிறகு இதை கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து பருகினால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
தீர்வு 04:
1)இஞ்சி துண்டு ஒன்று
2)தண்ணீர் தேவையான அளவு
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நெஞ்செரிச்சல் கட்டுப்படும்.
தீர்வு 05:
1)வெந்தயம் ஒரு ஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.பிறகு மறுநாள் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும்.
தீர்வு 06:
1)பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
2)தண்ணீர் 100 மில்லி
ஒரு கிண்ணத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.