நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சீரகத்தை வைத்து உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தீர்வு காணலாம்.
வாயுத்தொல்லை
1)சீரகம்
2)மோர்
3)உப்பு
4)இஞ்சி
ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸில் மோர் ஊற்றி நறுக்கிய இஞ்சி துண்டு,சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து குடித்தால் வாயுத்தொல்லை அகலும்.
சரும பிரச்சனை
1)சீரகம்
2)தேன்
சீரகத்தை லேசாக வறுத்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சருமப் பிரச்சனை சரியாகும்.
இரத்த அழுத்தம்
1)சீரகம்
2)உலர் திராட்சை
ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.மறுநாள் இதை மிக்ஸி ஜாரில் போட்டு திராட்சை ஊறவைத்த நீரை சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைக்கவும்.இந்த சாற்றில் 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து பருகினால் இரத்த அழுத்தம் குணமாகும்.
கண் கோளாறு
1)சீரகம்
2)மிளகு
3)நல்லெண்ணெய்
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 ஸ்பூன் சீரகம் மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு சேர்த்து காய்ச்சி ஆறவிடவும்.இந்த எண்ணையை கண்களை சுற்றி அப்ளை செய்து குளித்து வந்தால் கண் எரிச்சல்,கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
மன அழுத்தம்
1)அகத்தி கீரை
2)சீரகம்
3)சின்ன வெங்காயம்
1/4 கப் அகத்திகீரையில் சிறிதளவு சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்து குடித்து வந்தால் மன அழுத்தம் நீங்கும்.
உடல் சோர்வு
1)மிளகு
2)சீரகம்
3)கொத்தமல்லி
4)சுக்கு
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து ஒரு கப் நீர் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி
1)சீரகம்
2)கருப்பட்டி
ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடியாக்கி கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.
வயிற்று பொருமல்
1)சீரகம்
2)வெற்றிலை
3)மிளகு
ஒரு வெற்றிலையில் 1/4 ஸ்பூன் சீரகம் மற்றும் நான்கு மிளகு சேர்த்து மடித்து மென்று சாப்பிட்டால் வயிற்று பொருமல் குணமாகும்.
சீதபேதி
1)சீரகம்
2)ஓமம்
இந்த இரண்டு பொருட்களையும் வைத்து கசாயம் செய்து குடித்து வந்தால் அதிக பேதி நிற்கும்.
விக்கல்
1)சீரகம்
2)திப்பிலி
3)தேன்
ஒரு ஸ்பூன் சீரகத் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் திப்பிலி தூளை ஒன்றாக மிக்ஸ் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.