ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளது கர்ப்ப காலம் அழகான மற்றும் இனிமையான காலகட்டமாக திகழ்கிறது.பெண் தனது கருப்பையில் ஒரு புதிய உயிரை சுமப்பதால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை அவள் அனுபவிக்க வேண்டும்.
பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சோம்பேறியாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது,எந்நேரமும் தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி,நடைபயிற்சி போன்றவற்றை செய்தால் சிரமமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம்.
நம் அம்மா பாட்டி காலத்தில் நன்றாக வேலை செய்ததால் தான் அவர்களுக்கு சுகப் பிரசவம் எளிமையானது.ஆனால் இன்றுள்ள பெண் பிள்ளைகள் உடல் உழைப்பை விரும்புவதில்லை.இதனால் குழந்தை பிறக்கும் போது சிக்கல் உண்டாகிறது.இதனால் தான் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கடின உடற்பயிற்சி,அதிக எடை தூக்குதல்,அடிக்கடி மாடி படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்து எளிய விஷயங்களை செய்ய வேண்டும்.தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும்.
நடைபயிற்சி செய்வதால் இதய தசைகள் வலுவாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் நடைபயிற்சி செய்வதால் உடல் எடை கூடாமல் இருக்கும்.இதனால் உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கலாம்.
சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடைபயிற்சி செய்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படுவது கட்டுப்படும்.தினமும் நடைபயிற்சி செய்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏறப்டாமல் இருக்கும்.கர்ப்பிணி பெண்கள் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் சர்க்கரை நோய் அபாயம் குறையும்.