வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை எந்தவித சிரமமும் இன்றி எளிதில் விரட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணவும்.
டிப் 01:
புதினா எண்ணெய்
கரப்பான் பூச்சிகளுக்கு புதினா எண்ணையின் வாசனை பிடிக்காது.எனவே இந்த எண்ணெய் இரண்டு அல்லது மூன்று துளிகள் எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் ஒரே நாளில் அதன் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.
புதினா எண்ணெய் அதாவது மின்ட் ஆயில் இல்லாதவர்கள் புதினா தழைகளை அரைத்து சாறு எடுத்து நீரில் கலக்கி ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படும்.
டிப் 02:
பேக்கிங் சோடா
இது அனைவரது வீடுகளிலும் இருக்க கூடிய ஒரு பொருள் தான்.இந்த பேக்கிங் சோடாவை சமையலறையின் சிங்க்,ஸ்டவ்,மூலை முடுக்குகளில் தூவி விட்டால் கரப்பான் பூச்சிகள் அதை சாப்பிட்டு இறந்துவிடும்.
டிப் 03:
எலுமிச்சம் பழம்
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அந்த எலுமிச்சை தோலை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
அதன் பின்னர் ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த எலுமிச்சை தோல் பேஸ்ட் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் தெளித்தால் அதன் நடமாட்டம் கன்ட்ரோல் ஆகும்.
டிப் 04:
அத்தியாவசிய எண்ணெய்
மிளகு கீரை எண்ணெய் அல்லது லெமன் கிராஸ் எண்ணெயை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.