உங்களில் சிலரது வீடுகளில் மூட்டை பூச்சி நடமாட்டம் அதிகளவு இருக்கும்.படுக்கை அறை கட்டில்,உடலிகளின் ஓரங்களில் மூட்டை பூசிகள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.இரவு நேரத்தில் தூங்கும் போது கட்டிலில் இருந்து மூட்டை பூச்சிகள் வெளியேறி நமது உடலில் இரத்தத்தை உறிஞ்சுகிறது.இதனால் தூக்கம் கலைந்து கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.
மழை மற்றும் வெயில் காலங்களில் மூட்டை பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது.இந்த மூட்டை பூச்சிகளை உடனடியாக ஒழிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
தீர்வு ஒன்று
முதலில் 10 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிண்ணத்தில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கிராம்பை போட்டு ஒரு நாள் முழுவதும் ஊறவிடுங்கள்.பிறகு இதை ஒரு ஸ்ப்ரேயரில் வடிகட்டி மூட்டை பூச்சி காணப்படும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.
தீர்வு இரண்டு
உங்கள் கட்டில் அல்லது துணிகளில் மூட்டை பூச்சிகள் இருந்தால் இப்பொழுது சொல்லப்படும் டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க தண்ணீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.இந்த நீரை கட்டிலின் மீது ஊற்றினால் மூட்டை பூச்சிகள் துடிதுடித்து இறந்து விடும்.அதேபோல் சூடான நீரில் துணிகளை அலசினால் மூட்டை பூச்சிகள் நீங்கிவிடும்.
தீர்வு மூன்று
டீ ட்ரீ ஆயில் தேவையான அளவு எடுத்து நீரில் கலந்து மூட்டை பூச்சிகள் மீது தெளித்தால் அதன் தொல்லை ஒழியும்.
தீர்வு நான்கு
புதினாவை அரைத்து சாறு எடுத்து ஒரு கப் நீரில் கலந்து மூட்டை பூச்சிகள் மீது ஸ்ப்ரே செய்தால் அவை உடனடியாக தெறித்தோடுவிடும்.
தீர்வு ஐந்து
புதினா இலைகளை கசக்கி தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை கட்டுப்படும்.