க.அன்பழகன் மகள் உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் அஞ்சலி

Photo of author

By Jayachandiran

க.அன்பழகன் மகள் உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் அஞ்சலி

Jayachandiran

Updated on:

திமுக கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய க.அன்பழகன் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அன்புச்செல்வன் என்கிற ஒரு மகனும் மனமல்லி உட்பட இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் மனமல்லி உடல்நலக்குறைவு காரணமாக திடீரென இறந்த சம்பவம் திமுக கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மனமல்லியின் மறைவை அறிந்த திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

சில மாதங்களுக்கு முன்பு க.அன்பழகன் இறந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது மகளும் உடல்நலக்குறைவால் இறந்திருப்பது திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பமும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில் க.அன்பழகன் மனமல்லி திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியும், சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. இவரது உடலுக்கு திமுகவினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த மனமல்லி ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.