உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கிறது.ஆப்பிள்,மாதுளை,ஆரஞ்சு,பப்பாளி போன்ற பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியவை.பல நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க பழங்கள் பேருதவியாக இருக்கிறது.
பழங்களை போன்றே பழச்சாறிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறான ஒன்று ஆகும்.பழங்களில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் பழச்சாறில் இருந்து கிடைப்பதில்லை.சிலருக்கு பழச்சாறு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சிலருக்கு காலை நேரத்தில் பழச்சாறு அருந்தும் பழக்கம் இருக்கும்.இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு பழக்கமாகும்.சிலருக்கு உடற்பயிற்சி செய்த பிறகு பழச்சாறு அருந்தும் பழக்கம் இருக்கும்.காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பழச்சாறு அருந்தினால் உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும்.
அதேபோல் காலை நேரத்தில் பழச்சாறு அருந்தினால் பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.
யாரெல்லாம் பழச்சாறு அருந்தக் கூடாது தெரியுமா?
இரத்த சர்க்கரை நோய் இருப்பவர்கள்,வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பழச்சாறு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை சத்து இருப்பதால் பழச்சாறை அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு எளிதில் அதிகரித்துவிடும்.
பழச்சாறை மத்திய உணவு உட்கொண்ட பிறகு மற்றும் இரவு உணவு உட்கொள்வதற்கு முன் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.