Health Tips

வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றவங்க இதை செய்தால் நோய்தொற்று அபாயம் குறையும்!!

Photo of author

By Rupa

இந்தியர்களிடையே தற்பொழுது வெஸ்டர்ன் டாய்லெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.அதிக வசதி கொண்ட இந்த மேற்கத்திய கழிப்பறை இன்று கட்டப்படும் வீடுகளில் காண முடிகிறது.முழங்கால் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தியன் டாய்லெட்டில் அமர்வது சிரமமாக இருந்து வந்தது.ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட்டில் இதுபோன்ற சிரமம்’ஏற்படாது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்த விரும்புகின்றனர்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் பல நன்மைகள் இருந்தாலும் இது நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.வெஸ்டர்ன் டாய்லெட்டில் உள்ள இருக்கை நேரடியாக உடலை டச் பண்ணுவதால் அதில் இருக்கின்ற நோய் தொற்றுகள் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால் சிறுநீரக தொற்று ஏற்படக் கூடும்.எனவே வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவதற்கு முன்னர் அதை ப்ளஷ் செய்ய வேண்டும்.

டாய்லெட்டின் இருக்கையில் ஈரம் இருந்தால் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.இதனால் நோய்தொற்று அபாயம் குறையும்.நீங்கள் மலம் கழித்த பிறகு சீட்டை க்ளோஸ் செய்த பின்னர் ப்ளஷ் செய்ய வேண்டும்.

டாய்லெட்க்குள் மலம் அல்லது சிறுநீர் கழிக்க செல்பவர்கள் வேலையை விரைவில் முடித்துவிட்டு வெளியேறிவிட வேண்டும்.அதிக நேரம் டாய்லெட்டில் இருப்பதால் நோய் கிருமிகள் பரவி உடல் ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்

இது தெரியுமா? இவங்க கட்டாயம் ஜூஸ் குடிக்கவே கூடாது!! இது மருத்துவர்களின் எச்சரிக்கை!!

ATM-ல் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டு வந்துவிட்டதா? உங்கள் மொபைலின் இந்த SMS இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்!!