கோடை என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம் தான்.அதிக வாசனை மற்றும் சுவை நிறைந்த மாம்பழத்தை விரும்பாதவர் யாரும் இருக்கமாட்டர்.மாம்பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதை போலவே அதன் இலைகளிலும் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது.
மாவிலை இரத்த சர்க்கரை,புற்றுநோய்,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு மருந்தாக விளங்குகிறது.மாவிலையில் வைட்டமின் ஏ,சி,ஆன்டி ஆக்ஸி டன்ட்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.
மாவிலை பயன்கள்:
1)தினமும் மாவிலையை பொடியாக்கி கசாயம் செய்து குடித்தால் தொண்டை சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.
2)வறட்டு இருமல் பாதிப்பு இருப்பவர்கள் மாவிலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தலாம்.
3)முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க மாவிலையை பொடியாக்கி தலையில் அப்ளை செய்து குளிக்கலாம்.
4)வயிற்றில் புண்கள் இருப்பவர்கள் மாவிலையை அரைத்து சாறு எடுத்து மோர் அல்லது தயிரில் கலந்து குடித்தால் பலன் கிடைக்கும்.
5)மாவிலையில் டீ செய்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவது கட்டுப்படும்.
6)இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மாவிலை பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
7)மாவிலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
8)மாவிலையை வேகவைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.
9)செரிமானக் கோளாறு இருபவர்கள் மாவிலையை பொடியாக்கி தேனில் குழைத்து கிடைக்கும்.
யாரெல்லாம் மாவிலை பொடி சாப்பிடக் கூடாது?
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மாவிலை பொடியை பயன்படுத்தக் கூடாது.