இன்று பலருக்கு முடி உதிர்தல் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தலை முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த மார்க்கெட்டில் விற்கப்படும் ஷாம்பு,ஆயில் என அனைத்தையும் வாங்கி பயன்படுத்தியும் பலனை பார்க்க முடியவில்லையா? அப்போ கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் முடி உதிர்தல் நின்று அடர்த்தியான நீளமான கூந்தலை வளர வைக்க முடியும்.
கூந்தலை நீளமாக்கும் மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை துண்டு
2)கருஞ்சீரகம்
3)வெந்தயம்
4)தேங்காய் எண்ணெய்
5)புதினா தழை
செய்முறை விளக்கம்:
1.ஐந்து கற்றாழை துண்டுகள் மற்றும் ஒரு கைப்பிடி புதினா தழையை தண்ணீரில் போட்டு அலசி கொள்ளுங்கள்.
2.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கற்றாழை துண்டுகள் மற்றும் புதினா தழைகளை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
3.பிறகு அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு படுத்துங்கள்.
4.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம்,ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
5.இதை தொடர்ந்து அரைத்த கற்றாழை புதினா விழுதை அதில் சேர்த்து குறைவான தீயில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
6.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு ஈரம் இல்லாத ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமியுங்கள்.
7.இந்த எண்ணெயை தினமும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி கருகருவென்று அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.