தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பெறும் வகையில் ரூ.700 கட்டினால் ரூ.10 லட்சம் வரை வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , ரூ.10,00,000 காப்பீடு தொகைக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை சந்தா ரூ.700+GST செலுத்த வேண்டும், மேலும் விபத்து காப்பீட்டில் சந்தா மூன்றாண்டுக்கு ஒரு முறை 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.395+GST தேர்வு செய்து கொள்ளலாம்.
அதன்படி உங்களுக்கு தேவையான போது காப்பீட்டை எடுத்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் புற்றுநோய் , சிறுநீரக செயலிழப்பு, கரோனரி ஆர்ட்டரி பை-பாஸ் கிராப்ட்ஸ்,இதய வால்வு அறுவை சிகிச்சை, பக்கவாதம், முதன்மை நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மாரடைப்பு, கோமா போன்ற 13 நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தை இந்த சிகிச்சைக்கு எடுத்து கொள்ளலாம்