இந்திய அரசாங்கத்தால் வழங்கபடும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஒரு அடையாள ஆவணமாகும்.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது.அரசு நலத் திட்டங்கள்,சலுகைகள் பெற,வங்கி கணக்கு திறக்க,கடன் பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது.
12 இலக்க எண் கொண்ட ஆதரில் பெயர்,பிறந்த தேதி,முகவரி,பாலினம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.முக்கிய முகவரி சார்ந்த ஆதாரமாக திகழும் ஆதார் கார்டில் விவரங்களை துல்லியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதை புதுப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆதாரில் கண் கருவிழி,கைரேகை பதிவு அடங்கிய பயோமேட்ரிக் தகவல் இடம் பெற்றிருப்பதால் போலி ஆதாரை எளிதில் கண்டறிந்து மோசடிகளை குறைக்க முடியும்.
முன்பு பேங்க் பாஸ் புக்கில் மட்டும் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்து நிலையில் தற்பொழுது ரேசன் கார்டு,பான் கார்டு,EB பில் போன்றவற்றுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இப்படி ஆதார் எண் இணைக்க மொபைல் நம்பர் அவசியமான ஒன்றாக உள்ளது.எந்த ஒரு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க,பிற சேவைகள் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்த ஆதரில் பதிவாகி உள்ள மொபைல் நம்பர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டை இணைக்கலாம் என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.இதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறது.அதாவது வீட்டில் உள்ள அனைவரும் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆதார் கார்டை இணைக்கலாம்.நீங்கள் இணைத்திருக்கும் மொபைல் எண் எப்பொழுதும் பயன்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.