போலி என் சி சி முகாம் மூலம் நடந்த பாலியல் தொல்லை குறித்து அந்த முகாம் நடத்தப்பட்டது எப்படி என்பது குறித்து நீதிபதி கேள்வி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என் சி சி முகாம் நடைபெற்றது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என் சி சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேலும் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பள்ளியின் போலி பயிற்சியாளர் சிவராமன் அண்ட் பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆசிரியர்கள் என் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து இவரின் தந்தை ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு 1.63 கோடி கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து அறிக்கை அளிக்கப்பட விவகாரத்தில் நீதிபதி கூறுகையில், நீதிமன்றம் திருப்தி அடையவில்லை. திருப்தி அடையும் வகையில் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. போலி என் சி சி முகாம் நடத்தப்பட்டது எப்படி? அதன் உள்நோக்கம் என்ன என்பது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை வருகிற அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.