இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் சப்பாத்திக்கு தனி இடம் உண்டு. கோதுமை, மைதா, ராகி, சோளம் போன்ற மாவில் சப்பாத்தி செய்யப்படுகிறது. உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க சப்பாத்தி சிறந்த தீர்வாக இருக்கிறது. டயட் இருப்பவர்கள் பட்டியலில் கட்டாயம் சப்பாத்தி இடம் பெற்றிருக்கும்.
எண்ணெய் பயன்படுத்தாமல் சுட்டு எடுப்பதால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக திகழ்கிறது. சிலருக்கு சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் சப்பாத்தி சூடாக இருக்கும் போது நெய் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிட்டால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும். சப்பாத்தியுடன் நெய் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
எலும்பு வலிமையை அதிகரிக்க சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடலாம். நெயில் உள்ள ஆன்டி. ஆக்ஸிடன்ட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
சப்பாத்தியில் நெய் சேர்ப்பதால் அதன் சுவை மேலும் அதிகரிக்கிறது, இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கிறார்கள்.
சப்பாத்தியில் சிறிது நெய் தடவி சாப்பிடும் போது உடலில் ஆரோக்கிய கொழுப்பு அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை எரிக்கிறது.
குடல் இயக்கம் சீராக இருக்க சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடலாம். சப்பாத்தியில் நெய் சேர்ப்பதால் குடலில் ஆரோக்கிய பாக்டீரியாக்கள் அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.