உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?

0
106
From head to toe.. Do you know which oil can beat all diseases?
From head to toe.. Do you know which oil can beat all diseases?

சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.ஆனால் நல்லெண்ணெய்,கடுகு எண்ணெய் வகைகள் சமைப்பதற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிற்கும்,உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயன்படுகிறது.

நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் கடுகு எண்ணெயின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.இந்த கடுகு எண்ணெய் வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கடுகு எண்ணையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகமாகும்.மூட்டு வலி பிரச்சனை இருந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் தடவினால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய் கல்லீரல் மற்றும் மண்ணீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் பித்தத்தை குறைக்க செரிமான அமைப்பை மேம்படுத்த கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்.

சரும வறட்சி நீங்கி பொலிவு பெற கடுகு எண்ணெய் உதவுகிறது.தினமும் குளிப்பதற்கு முன்னர் கடுகு எண்ணெயை சருமத்திற்கு அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால் சருமம்மிருதுவாக இருக்கும்.

கூந்தல் வறண்டு இருந்தால் தேங்காய் எண்ணையில் கடுகு எண்ணெய் மிக்ஸ் செய்து தலைக்கு அப்ளை செய்யலாம்.அதேபோல் முடி உதிர்தல்,முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெயில் தீர்வு இருக்கிறது.

கடுகு எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் தேமல்,அரிப்பு,தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.கடுகு எண்ணெயில் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல் சிதைவு பல் வலி அனைத்தும் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் கடுகு எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.கடுகு எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Previous articleநீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleBRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!