உடலில் உள்ள மிக முக்கிய உள்ளுறுப்பு மூளை.இதன் செயல்பாடு நன்றாக இருந்தால் மட்டுமே உடலில் உள்ள பிற உறுப்புக்கள் சீராக இயங்கும்.ஆனால் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது ஆபத்தான தொந்தரவுகளை கொடுத்துவிடும்.
குறிப்பாக மூளை பக்கவாதம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.மூளை இரத்த நாளங்கள் வெடிப்பின் காரணமாக இந்த பக்கவாதம் உண்டாகிறது.மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த பக்கவாதம் ஏற்படும்.இந்த பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த பக்கவாத நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளா விட்டால் அது உயிரிழப்பிற்கு வழிவகுத்துவிடும்.எனவே மூளை பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதன் தாக்கத்தில் இருந்து எளிதில் தப்பித்துவிட முடியும்.
மூளை பக்கவாத அறிகுறிகள்:
1)பேசுவதில் குழப்பம்
2)கை கால் முகத்தில் ஒரு பக்கம் உணர்வின்மை
3)நடப்பதில் சிரமம்
4)கடுமையான தலைவலி
5)தலைசுற்றல்
6)திடீரென்று உடல் பலவீனமாதல்
இரத்தம் உறைதல் மற்றும் மூளை நரம்புகளால் மட்டுமே இந்த பக்கவாதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.இரத்த வகையை பொறுத்து மூளை பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மூளை பக்கவாதம் ஏற்பட குறிப்பிட்ட இரத்த வகையும் காரணமாக இருக்கிறது என்பது நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது.இரத்த வகைகளில் O வகை கொண்டவர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆனால் A வகை பிளட் குரூப் கொண்டவர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.ஆனால் இந்த பிளட் குரூப் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் பயப்படத் தேவையில்லை.