என்னது? ரயிலில் பயணம் செய்தால் இவையெல்லாம் இலவசமாக கிடைக்குமா?

0
134
what is Do you get all these for free if you travel by train?
what is Do you get all these for free if you travel by train?

இந்தியாவில் சாலை போக்குவரத்து நெரிசல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது.குறிப்பாக பெரு நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இதன் காரணமாகவே மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.பயணம் செய்வதற்கான கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்து என்பதால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து சேவையை வழங்கி வரும் இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி இதர வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் இந்த வசதிகள் பொருந்தும்.

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் 6 சிறந்த இலவச வசதிகள்:

1)இந்தியா முழுவதிலும் சுமார் 6,000 ரயில் நிலையங்களில் இலவச WIFI வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.இது ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2)ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கி வருகிறது.அந்தவகையில் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு உறங்குவதற்காக பெட்ஷீட்,கம்பளி,தலையணையை இலவசமாக வழங்குகிறது.

3)ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் உள்ள லாக்கரில் தங்களது உடமைகளை ஒரு மாத காலம் வரை இலவசமாக வைத்துக் கொள்ளலாம்.

4)ரயிலில் பயணிக்கும் நபருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உரிய மருத்துவ வசதி வழங்கப்படும்.

5)நீங்கள் பயணிக்க வேண்டிய ரயில் தாமதமானால் ஸ்டேஷனில் உள்ள காத்திருப்போர் அறையில் ஓய்வு எடுக்கலாம்.

6)ராஜ்தானி,தூரந்தோ போன்ற ரயில்கள் வருவதற்கு தாமதமானால் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும்.

Previous articleBRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Next articleகுளிக்க போறிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து குளித்து பலன்களை பெறுங்கள்!!