POLITCS: தமிழக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி
இன்று நடைபெற்ற தமிழக திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக படபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசு பொதுவாக பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் தற்போது அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று துணை முதல்வர் அல்லது முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதே போல் திட்டம் மற்றும் செயலாக்க துறை சார்பில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார், இது போன்ற ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஒரு கட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பாடியவர்களை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி மீண்டும் பாடப்பட்டது இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு விளக்கமளித்த உதயநிதி தவறாக யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி கொண்டிருக்கும் போது திடீரென்று மைக்கில் கோளாறு ஏற்பட்டு பாடல் கேட்காமல் போனது அதனால் மீண்டும் பாடபட்டதே தவிர தவறாக பாடவில்லை என்று விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.