பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது அதனால் இடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.
நடந்து வரும் மூன்றாவது போட்டியில் 142 கிரிகெட் வரலாற்றில் என்தாஹ் ஆணியும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையை செய்து காட்டியுள்ளது பாகிஸ்தான் அணி . ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர் ஒரு பந்து கூட வீசாதா நிகழ்வு நடந்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி இந்த சாதனை சம்பவத்தை செய்துள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சஜித் கான் மற்றும் நோமன் அலி பந்து வீச அழைத்தது. இதற்கு முன் நடந்த போட்டியில் இவர்கள் இருவரும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த போட்டியில் இருவரும் இணைந்து 42 ஓவர்கள் வீசினர். இந்த போட்டியிலும் இவர்களே அதிகபடியான ஓவர்கள் வீசியுள்ளனர், சஜித் கான் 29.2 ஓவர்கள் வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜாஹித் முகமது ஒரு விக்கெட் எடுத்தார்.
பாகிஸ்தானில் நான்காவதாக பந்து வீசியவரும் ஒரு சுழற்பந்து வீச்சாளர். அதனால் முதல் இன்னிங்ஸில் இந்த நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசினர். வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இதன் மூலம் 142 ஆண்டுகளுக்கு பின் ஒரு அணி முதல் இன்னிங்ஸ் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே வைத்து பந்து வீசி உள்ளது. இதற்கு முன் 1882 ம் ஆண்டு இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது.