இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மருந்து மாத்திரையை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை அரைத்து சாறு எடுத்து அருந்துங்கள்.இது இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தீர்வு 01:
1)கேரட்
2)தண்ணீர்
முதலில் ஒரு முழு கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை தோல் நீக்கிவிட்டு கத்தி கொண்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரை கழுவி சுத்தம் செய்து நறுக்கிய கேரட் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துள்ள உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
தீர்வு 02:
1)பீட்ரூட்
2)தண்ணீர்
ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தீர்வு 03:
1)தக்காளி
2)தண்ணீர்
ஒரு முழு தக்காளியை கழுவி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.