இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. பெருங்குடலில் தேங்கிய மலக் கழிவுகள் வெளியேறும்!!

0
91
Drink a glass of this juice.
Drink a glass of this juice.

நாம் உண்ணும் உணவுகளை செரிக்கும் ஒரு பகுதி பெருங்குடல்.இதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.இந்த பெருங்குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் அது சரியாக செயல்படாமல் போகும்.

இதனால் மலக் கழிவுகள் பெருங்குடலில் தேங்கி வாயுத் தொல்லை,வாய் துர்நாற்றம்,உடல் துர்நாற்றம்,வயிறு உப்பசம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பெருங்குடலின் செயல்பாடு தடைபட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.இந்த பெருங்குடலில் உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற தண்ணீரில் எலுமிச்சம் பழம் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் பருக வேண்டும்.மலக் கழிவுகளை வெளியேற்ற சித்த மருத்துவத்தில் எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு லிட்டர்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)பனங்கருப்பட்டி – தேவையான அளவு
4)புதினா – இரண்டு அல்லது மூன்று

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அதன் பிறகு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் ஊற்றி கரண்டி கொண்டு கலந்து விடவும்.அடுத்து தேவைக்கேற்ப பனங்கருப்பட்டி சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கலக்கவும்.அவ்வளவு தான் மலக் கழிவுகளை வெளியேற்றும் அற்புத பானம் தயார்.

இந்த ஜூஸை காலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளையும் குடித்து வந்தால் பெருங்குடலில் உள்ள மலக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.இந்த ஜூஸை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு குடித்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்.

Previous articleதீபாவளிக்கு முன்னரே பண மழையில் நனைய போகும் அந்த 4 ராசியினர்!! உங்கள் ராசி இருக்கானு பாருங்க!!
Next articleநைட் நேரத்தில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!