காலை நேரத்தை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள அனைவரும் டீ,காபி போன்ற சூடான பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.டீ குடிப்பதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் கண்ட நேரங்களில் அருந்தினால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
சிலர் நாளொன்றுக்கு ஐந்து டீக்குள் மேல் குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இது மிகவும் தவறான பழக்கமாகும்.சிலர் உணவுகளுக்கு பதில் வெறும் டீ குடித்தே உயிர் வாழ்கிறார்கள்.இதை சொல்வதற்கு பெருமையாக இருக்கலாம்.இதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் கடுமையானதாக இருக்கும்.
டீ குடிப்பதற்கு என்று நேரம் காலம் இருக்கிறது.காலை நேரத்தில் குறைவான அளவே டீ குடிக்க வேண்டும்.மற்ற நேரங்களில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக மாலை நேரங்களுக்கு மேல் டீ குடிக்கவே கூடாது.சிலர் மாலை நேரத்தில் டீ குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர்.ஆனால் மாலை நேரத்தில் டீ குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
மாலை நேரத்தில் டீ குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்:
1)நீங்கள் மாலை நேரத்தில் டீ குடித்தீர்கள் என்றால் வாயுததொல்லை,வயிறு பிடிப்பு போன்றவை ஏற்படும்.
2)மாலை நேரத்தில் டீ குடிப்பதால் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.டீயில் நிறைந்துள்ள காஃபின் இதய ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
3)மாலை நேரத்தில் டீ குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.இதனால் தலைவலி,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
4)மாலை நேரத்தில் டீ குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகக் கூடும்.இதனால் சிலர் இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் அவதியடைகின்றனர்.