1st டே 1st ஷோ! வசூலில் முதல் சாதனை! எத்தனை கோடி தெரியுமா?

KGF2 திரைப்படத்தை  அமேசான்  நிறுவனம் ரூ350 கோடிக்கு வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவரை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலக சினிமா ரசிகர்களும் இந்திய படைப்பில் உருவாக்கப்படும் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட  மொழிகளில் தயாரிக்கும் படங்களை அவரவர் மொழியில் மொழிபெயர்த்து படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டாடித் தீர்த்தார்கள்.

அந்த வகையில், கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த ஒரே திரைப்படம் எது என்றால் அது KGF  தான். கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் ஜான் விக் திரைப்படத்திற்கு சமமாக இந்த படம் பேசப்பட்டது. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்டவற்றுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதனுடைய இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

வருகின்ற அக்டோபர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து கொரோனா பாதிப்பால்  திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே இதனை தியேட்டர்களில் வெளியிட சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அமேசான் நிறுவனம் கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குவதற்கு தயாராகி உள்ளது. இதற்காக 5 மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 350 கோடி வழங்க தயாராக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் மூலம் முதல் நாள் முதல் ஷோவிற்கு 350 கோடி வசூல் என்பது சினிமா வரலாற்றில் முதல் சாதனையாகும்.