எவ்வளவு செலவானாலும் இந்த ஊரில் இருக்க கூடாது! பொதுமக்கள் அதிரடி!

0
67

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு  விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு  அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில்  சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, பொதுப் போக்குவரத்துகளை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.தளர்வுகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்கூட்டியே முடிவு செய்ததால், கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் இந்தியாவில் நடைபெறத் தொடங்கின. அதன்படி,

சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் நாளொன்றுக்கு 25 க்கும் குறைவாக இருக்க  வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னைக்கு வரக்கூடிய விமானங்களின் எண்ணிக்கை  உயர்த்தப்பட்டது. அதன்படி, 20 நாட்களில் கிட்டத்தட்ட 490 விமானங்கள் மூலம்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.

அதேபோல் அந்த விமானம் திரும்பி சென்னைக்கு வருகையில்  33 ஆயிரம் பேருடன் வருகை தந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், அங்கே வசித்து வரும் பிற மாநில, மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கே சென்று பிழைப்பை நடத்தி விடலாம் இங்கிருந்து உயிரை விட முடியாது எப்படியாவது தப்பித்து விட நினைக்கின்றனர்.

இதற்குக் காரணம் அதிக செலவானாலும்  பரவாயில்லை விமானத்தில் சென்று விடலாம் என்ற முடிவில் பயணிப்பதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சில முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க கோரியும் அரசிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K