இந்திய உணவுகள் பெரும்பாலும் மசாலா பொருட்களால் நிறைந்தவையாகும்.பட்டை,இலவங்கம்,ஏலக்காய்,கொத்தமல்லி,கல்பாசி போன்ற மசாலா பொருட்கள் உணவின் சுவையை கூட்டுவதோடு அதில் இருக்கின்ற மருத்துவ குணங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.
இதில் பட்டை,இலவங்கம்,கொத்தமல்லி போன்ற மசாலா பொருட்களின் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருப்பீர்.ஆனால் கல்பாசி என்று அழைக்கப்படும் ப்ளாக் ஸ்டோன் ப்ளவரின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த கல் பாசி பிரியாணி செய்வதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இந்த கல்பாசி கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் வலுவான வாசனை கொண்ட பூஞ்சையாகும்.இது அருணாச்சல் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் அதிகளவு வளர்கிறது.கல் பாசி மூட்டு வலி,தசை பிடிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக செயல்படுகிறது.
கல் பாசியில் இருக்கின்ற பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள புண்கள்,வீக்கங்களை எளிதில் குணமாக்க உதவுகிறது.செரிமானப் பிரச்சனை,இதயம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்க கல் பாசி உணவுகளை உட்கொள்ளலாம்.
மலச்சிக்கல்,குமட்டல்,வயிறு வீக்கம்,வயிற்றுப்போக்கு,,வாயுத் தொல்லை போன்ற வயிறு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளையும் குணமாக்க உதவுகிறது.இந்த கல் பாசி உடலில் ஒட்டுமொத்த செரிமான செயல்முறையும் மேம்படுத்துகிறது.
தோல் அரிப்பு,சரும வெடிப்பு,புண்கள் போன்றவற்றை குணமாக்க கல் பாசியை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.கல் பாசி கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.கல் பாசி ஊறவைத்த நீரை பருகி வந்தால் சிறுநீரக பாதை தொற்றுகள் அனைத்தும் குணமாகும்.கல் பாசியானது கிட்டினியில் கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.இருமல்,ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளுக்கு கல் பாசி சிறந்த தீர்வாகும்.