நோயின்றி ஆரோக்கியமாக வாழ நாம் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.உணவுமுறைகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் நாம் சில தவறான பழக்கங்கள் கொண்டிருந்தால் நிச்சயம் நோய்வாய்ப்பட்டு விடுவோம்.
காலை நேரத்தில் நாம் செய்யக் கூடிய சில விஷயங்கள் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க நாம் காலை பொழுதில் பின்பற்றும் பழக்கங்களே காரணம்.
எனவே காலையில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும்.நீங்கள் தினந்தோறும் காலை செய்து வரும் ஹெபிட்ஸ் அதாவது பழக்கங்கள் நல்லதா என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் மலம் கழித்த பிறகு கைகளை சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.அதேபோல் குளியல் அறைக்கு சென்று வந்ததும் கைகளை முறையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் இந்த பழக்கத்தை பின்பற்றுவதில்லை.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
அனைவருக்கும் காலை நேரத்தில் டீ,காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.சிலர் ஏற்கனவே காபி,டீ குடித்து விட்டு வைத்த குவளையை சுத்தம் செய்யாமல் அதை பயன்படுத்துவார்கள்.இதனால் குவளையில் இருக்கின்ற கிருமி தொற்றுகள் நேரடியாக உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
காலையில் எழுந்ததும் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை போல் பல் துலக்க பயன்படுத்தும் பிரஸையும் தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் அதில் பாக்டீரியாக்கள் தேங்கி வாய் சுகாதாரத்தை பாதிக்கச் செய்துவிடும்.
கைகளை சுத்தமாக கழுவிவிய பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.ஆனால் பலர் சாப்பிடுவதற்கு முன்னர் கைகளை சுத்தம் செய்வதே இல்லை.காலாவதி தேதி முடிந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல் காலாவதியான ஒப்பனைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கடின உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.இது தசை பிடிப்பை ஏற்படுத்தும்.எனவே சீரான உணவு,எளிய உடற்பயிற்சி போன்றவற்றை செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அது மட்டுமின்றி அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவுதல்,பாத்திரங்கள் மற்றும் குவளைகளை சுத்தப்படுத்தி பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக செய்து வந்தால் நோய் வாய்ப்படுவதை தவிர்க்க முடியும்.