தினமும் ஏதாவது ஒரு காய்கறியை வைத்து தான் உணவு சமைக்கின்றோம்.ஆனால் நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் என்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது உடலில் எந்த நோய்களை குணமாக்குகிறது என்று பலரும் அறிவதில்லை.
இந்நிலையில் நாம் உண்ணும் காய்கறிகள் இந்நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது என்று இங்கு தெளிவாக விளக்கட்டுள்ளது.
1)முட்டைகோஸ்
இதை சிலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்கிறது.
2)முருங்கை காய்
இதில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.முருங்கை காய் சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும்.ஆண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கை காய் தீர்வாக இருக்கிறது.
3)பூசணிக்காய்
இதில் பீட்டா கரோட்டின் அதிகளவு உள்ளது.பூசணிக்காயை உணவில் சேர்த்து கொண்டால் நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.
4)சுரைக்காய்
நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் சுரைக்காய் ஏராளமான நன்மைகள் கொண்டிருக்கிறது.உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள சுரைக்காய் சாப்பிடலாம்.
5)பச்சை மிளகாய்
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாய் புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
6)புடலங்காய்
இதில் கால்சியம்,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,இரும்பு,வைட்டமின்ங்கள்,பொட்டாசியம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
7)பாகற்காய்
இதில் வைட்டமின்,பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.அடிக்கடி பாகற்காய் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.
8)கேரட்
இந்த காயை விரும்பி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை.இதில் பீட்டா கரோட்டின்,வைட்டமின் ஏ போன்றவை அதிகளவு காணப்படுகிறது.கண் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.