கூந்தல் நீளமாக வளர உதவும் ஹெர்பல் ஆயில்!! ஜஸ்ட் 2 பொருள் இருந்தால் போதும்!!

0
94
Herbal oil to help hair grow longer!! Just 2 items are enough!!
Herbal oil to help hair grow longer!! Just 2 items are enough!!

உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர நெல்லிக்காயில் செய்யப்பட்டால் ஹெர்பல் ஆயில் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – பத்து
2)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
3)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து நெல்லிக்காய் எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அடுத்து இதை காட்டன் துணியில் பரப்பி விட்டு ஒரு வாரத்திற்கு வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய்,100 மில்லி ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.பிறகு அதில் காய வைத்த நெல்லித்துண்டுகளை போட்டு நன்றாக காய்ச்சவும்.பிறகு அடுப்பை அணைத்து விட்டு நெல்லி எண்ணெயை இரண்டு நாட்களுக்கு ஆறவிடவும்.

பிறகு ஒரு ஈரமில்லாத டப்பாவில் காய்ச்சிய எண்ணெயை வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று கருகருன்னு அடர்த்தியான முடி வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி பூ
2)செம்பருத்தி இலை
3)தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலை மற்றும் ஒரு கைப்பிடி செம்பருத்தி இதழை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 500 மில்லி செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் அரைத்த செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை சேர்த்து குறைந்த தீயில் காய்ச்சவும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை நன்கு ஆறவிடவும்.இந்த எண்ணெயை பாட்டிலுக்கு வடிகட்டி தினமும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

Previous articleஉடலை திடமாக்கும் பச்சை பயறு!! இவர்களெல்லாம் சாப்பிட்டால் இந்த பிரச்சனை உண்டாகும்!!
Next articleவாடிக்கையாளர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை!! இந்தியாவின் சிறந்த வங்கி எது என்று தெரியுமா ?