தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி சாலையில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் திராவிட மாடல் அரசையும் திமுக வையும் நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார்.
மாநாடு முடிந்த பிறகு திமுகவின் மூத்த தலைவர்கள் விஜயை விமர்சிக்க களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தவெக உடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விசிக அந்த கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விஜய் யை கடுமையாக விமர்சிக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இப்போது ஒட்டுமொத்த அரசியல் களமும் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளது. அனைவரும் அவரது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுகவின் அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் விஜய் யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் ரகுபதி பாஜகவின் c டீம் தான் தவெக என கூறினர், ரஜினிகாந்திற்கு பதிலாக பாஜக களமிறக்கியவர் தான் விஜய் என்றார் அப்பாவு.
காங்கிரஸை தொடர்ந்து எதுவும் பேசாமல் இருக்கும் இடதுசாரிகளும் தவெக தலைவர் விஜய் யை கடினமாக சாடி அறிக்கைகள் வெளியிடலாம். அமைதியாக இருந்த திமுக இதற்கு மேல் மவுனம் கலைத்து தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனத்தை வைக்க உள்ளனர். அப்போது தான் திமுக கூட்டணி பலவீனமாக இல்லாமல் பலத்துடன் உள்ளது என்ற கருத்தை பொதுமக்களிடையே வெளிபடுத்த முடியும் என்ற திட்டத்தில் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.