Diwali History in Tamil: தீபாவளி பண்டிகையை கொண்டாட இந்திய முழுவதும் பல வகையான புராணகதைகள் உள்ளன.
தீபாவளி கொண்டாட பலவகையான புராணக்கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்திய முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த பண்டிகை. வடநாட்டு மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு புராணக்கதை உள்ளது.
ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து கொண்டு தந்து மனைவி சீத மற்றும் தனது தம்பி லட்சுமணன் உடன் அயோத்தி திரும்பிய நாள். அன்று அம்மாவாசை இருட்டு அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்க தீப ஒளியை ஏற்றி வரவேற்றுள்ளனர் இந்த தீப ஒளியில் வரவேத நாள் தீப ஒளி நாள் தீபாவளி நாளாக மாறியது.
ஸ்கந்த புராணத்தின் படி பார்வதி தேவி மேற்கொண்ட கேதார கவுரி விரதம் முடிந்த பிறகு சிவன் தன்னுள் பாதி அவர்தரமாக ஏற்ற அர்த்தனாதீஸ்வரர் உருவம் எடுத்த நாளாக கருதப்படுகிறது. மேலும் மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாடு திரும்பிய நாளன்று தீப ஒளி ஏற்றி வரவேர்ததாக கூறபடுகிறது.
சமண மதத்தின் படி மகாவீரர் முக்தி அடைந்ததை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. மேலும் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி என்று சொல்லபடுகிறது. இந்த நாளை சிங்கப்பூர் வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் வெளிச்ச நாளாக கொண்டாடபடுகிறது.
தமிழ்நாடும் தீபாவளியும்: நம் தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட பரவலாக பேச படுவது நரகாசூரன் தான் பூமாதேவிக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகன் துர்குணங்கள் பெற்றிருக்கிறான். நரக அசுரன் என அழைக்கப்பட்ட அவன் நாளடைவில் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மக்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றான். இதை அறிந்து விஷ்ணு மற்றும் பூமாதேவி இவனை அளிக்கும் தருவாயில் நரகாசூரன் ஒரு வரம் கேட்கிறான் நான் இறந்ததை உலகம் கொண்டாட வேண்டும் என்று அதன் பேரில் தீபாவளி கொண்டாடபடுகிறது.