இன்று பலர் சர்க்கரை நோயாளிகளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,பரம்பரை தன்மை,உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழக்கைமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் முதலில் வெள்ளை அரிசி உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சிலர் சப்பாத்தியை சாப்பிடுவார்கள்.ஆனால் சப்பாத்தியை விட பிரவுன் ரைஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரவுன் ரைஸில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.இது சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.பிரவுன் ரைஸில் உமி பாலிஷ் செய்யாமல் இருக்கும்.இதனால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்கும்.
பிரவுன் ரைஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
புரோட்டின்,பைபர்,மாங்கனீஸ்,செலினியம்,ஜிங்க்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கியிருக்கிறது.வெள்ளை அரிசியை உட்கொள்வதை காட்டிலும் பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
இந்த பிரவுன் ரைஸ் இரத்த சர்க்கரைக்கு மட்டுமின்றி உடல் பருமன்,செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு தீர்வாக இருக்கிறது.பிரவுன் ரைஸை சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பிரவுன் ரைஸ் சாப்பிடலாம்.
பிரவுன் ரைஸில் இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால் தினசரி உணவாக எடுத்துக் கொள்ளலாம்.