குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி அவர்களின் உடல் எடை பொறுத்து தான் இருக்கிறது.குழந்தைகள் குறைவான உடல் எடை கொண்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க பொட்டுக்கடலையில் கஞ்சி செய்து கொடுங்கள்.
பொட்டுக்கடலையில் புரோட்டீன்,சோடியம்,பொட்டாசியம்,நார்ச்சத்து,நிறைவுற்ற கொழுப்பு உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.
பொட்டுக்கடலை கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1)பொட்டுக்கடலை – மூன்று தேக்கரண்டி
2)ஏலக்காய் – இரண்டு
3)முந்திரி – 10
4)நெய் – ஒரு தேக்கரண்டி
5)பால் – ஒரு கப்
6)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து மூன்று தேக்கரண்டி பொட்டுக்கடலை சேர்த்து குறைவான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு ஏலக்காய் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் 10 முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
பிறகு அதே வாணலியில் ஒரு கப் காய்ச்சாத பசும் பால் ஊற்றவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரண்டி கொண்டு சிறிது நேரம் கிண்டிவிடவும்.
பிறகு அரைத்த பொட்டுக்கடலை மாவை கொட்டி கைவிடாமல் கிளறவும்.பொட்டுக்கடலை பச்சை வாடை நீங்கியதும் சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து கலந்துவிடவும்.
இறுதியாக நெயில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து வாணலியை இறக்கவும்.இந்த பொட்டுக்கடலை கஞ்சியை ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பொட்டுக்கடலை கஞ்சி செய்து கொடுத்தால் குழந்தைகளின் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.