உடல் சூடு,அலர்ஜி போன்ற காரணங்களால் கால்களில் ஆணி உருவாகிறது.இது கால்களில் சிறு கொப்பளம் போல் உருவாகிறது.இந்த பாதிப்பு ஏற்பட்டால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
கால் ஆணியை குணபடுத்தும் சிறந்த வீட்டு தைத்திங்கள்:
1)அம்மான் பச்சரிசி
கால் ஆணி உள்ள இடத்தில் அம்மன் பச்சரிசி இலையின் பாலை தடவினால் விரைவில் அவை குணமாகிவிடும்.
2)கொடிவேலி வேர் + மஞ்சள் தூள்
சிறிதளவு கொடிவேலி வேரை தண்ணீரில் நினைத்து அம்மியில் வைத்து அரைக்கவும்.பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நைஸாக அரைத்து கால் ஆணி மீது தடவி வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.
3)பூண்டு
கால் ஆணி உள்ள இடத்தில் பூண்டு பற்களை நசுக்கி அதன் சாற்றை பிழிந்து தடவினால் சில தினங்களில் ரிலீஃப் கிடைத்துவிடும்.
4)மஞ்சள் + வசம்புத் துண்டு
உரலில் ஒரு துண்டு வசம்பு மற்றும் ஒரு துண்டு மஞ்சள் சேர்த்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி கால் ஆணி மீது தடவினால் சில தினங்களில் அவை குணமாகிவிடும்.
5)மருதாணி + மஞ்சள்
சிறிதளவு மருதாணி இலையை மைய்ய அரைத்து மஞ்சள் தூள் கலந்து கால் ஆணி மீது தடவினால் விரைவில் மறைந்துவிடும்.
6)கொடிவேலிப் பட்டை + புளியங்கொட்டை
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து நீர்விட்டு அரைத்து கால் ஆணி மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.