இந்த எண்ணெயை சூடாக்கி மூட்டுகளில் தேய்த்தால் நீண்ட நாள் வலி காணாமல் போய்விடும்!!

0
87
Heat this oil and rub it on the joints and the pain will disappear for a long time!!
Heat this oil and rub it on the joints and the pain will disappear for a long time!!

இக்காலத்தில் மூட்டு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக் கூடிய பாதிப்பாக மாறிவிட்டது.இந்த மூட்டு வலியை குணமாக்க பல நவீன சிகிச்சைகள் இருந்தாலும் பாரம்பரிய வைத்தியங்களை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1)தேங்காய் எண்ணெய்
2)விளக்கெண்ணெய்
3)நல்லெண்ணெய்

ஒரு இரும்பு வாணலியில் 50 மில்லி தேங்காய் எண்ணெய்,50 மில்லி விளக்கெண்ணெய்,50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி கொள்ளுங்கள்.இந்த எண்ணெயை ஒரு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இரவு நேரத்தில் இந்த எண்ணெயை இரண்டு மூட்டுகளிலும் தடவி விட்டு உறங்குங்கள்.இப்படி தினமும் செய்து வந்தால் மூட்டு வலி குணமாகிவிடும்.

1)கோதுமை
2)தேன்

25 கிராம் கோதுமையை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து சலித்துக் கொள்ளுங்கள்.

இந்த கோதுமை மாவில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

1)சரக்கொன்றை விதை
2)தண்ணீர்

இரண்டு அல்லது மூன்று சரக்கொன்றை விதையை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து மூட்டு பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் வலி வீக்கம் குறையும்.

1)கணை பூண்டு
2)வேப்ப எண்ணெய்

இரண்டு தேக்கரண்டி வேப்ப எண்ணையை இரும்பு வாணலியில் ஊற்றி கணை பூண்டு இடித்து போட்டு வதக்குங்கள்.பிறகு இதை ஆறவிட்டு மூட்டுகளில் அப்ளை செய்து வந்தால் வலி குறையும்.

1)நொச்சி இலை
2)நெய்
3)கரு மிளகு

இரண்டு நொச்சி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு அல்லது மூன்று மிளகை உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ளுங்கள்.இந்த மிளகுத் தூளை நொச்சி இலை சாறில் போட்டு கலக்கவும்.

பிறகு அதில் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.

1)அத்திப்பால்

மூட்டு பகுதியில் அத்திக்காய் பாலை வைத்தால் வலி குறைவதை கண் கூடாக பார்க்க முடியும்.

Previous articleஅடுக்குத் தும்மல் பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு பூவில் டீ போட்டு குடித்தால் சரியாகிவிடும்!!
Next articleரஷ்யாவிற்கு உள்ளூர் விமான சேவைக்காக இந்தியாவிடம் கேட்கப்பட்ட ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள்!!