விக்கல்,தும்பல் போன்றவை இயல்பாக அனைவருக்கும் ஏற்படக் கூடிய நிகழ்வாகும்.விக்கல் வந்தால் யாரோ உங்களை நினைக்கிறார் என்று பிறர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையான காரணம் இது அல்ல.அறிவியல் பூர்வமாக விக்கல் எதனால் ஏற்படுகிறது என்று இதுவரை சரியான காரணம் கண்டறிய முடியவில்லை.
சிலருக்கு வேகமாக உணவு சாப்பிட்டால்,அதிகமாக சிரித்தால் விக்கல் வரும்.இந்த விக்கல் சில நிமிடங்கள் வந்தால் பிரச்சனை இல்லை.தொடர்ந்து விக்கல் வந்தால் அலட்சியம் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை செய்து பலனடையவும்.
மாவிலை பொடி
நன்கு முற்றிய மாவிலை 10 முதல் 15 பறித்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பவுடர் பதத்திற்கு அரைத்து தணலில் கொட்டி சுவாசித்தல் விக்கல் நிற்கும்.
உங்களுக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும் என்றால் நீங்கள் மாவிலையை அரைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
நெல்லிக்காய்
தேன்
மலை நெல்லிக்காய் இரண்டு அல்லது மூன்று எடுத்து சதைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த சாறில் ஒரு தேக்கரண்டி தேன் குழைத்து சாப்பிட்டால் உடனடியாக விக்கல் நிற்கும்.
விளக்கெண்ணெய்
தேன்
உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி தேன் கலந்து விரலில் ஊற்றி நாவில் வைத்து சிறிது நேரம் சப்ப வேண்டும்.இப்படி செய்வதால் விக்கல் உடனடியாக நிற்கும்.
பச்சை ஆலிவ் காய்
உங்களுக்கு விக்கல் வரும் போது ஒரு பச்சை ஆலிவ் காயை சாப்பிட்டால் விக்கல் உடனடியாக நிற்கும்.