பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பானமாகும்.குழந்தைகளுக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் பால் சுரப்பதை நிறுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:
1)தேங்காய் பூ
*அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு கைப்பிடி தேங்காய் பூ போட்டு மிதமான தீயில் வதக்குங்கள்.
*தேங்காய் பூ நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்.
*பிறகு இந்த தேங்காய் பூவை மார்பின் இரு புறங்களிலும் பூசி காட்டன் துணி வைத்து காட்டினால் பால் சுரப்பு நிற்கும்.
தீர்வு 02:
1)மல்லிகை பூ
*ஒரு கைப்பிடி மல்லிகை பூவை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
*பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
*இந்த பேஸ்டை மார்பகங்களில் பூசினால் சில மணி நேரத்தில் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
தீர்வு 03:
1)துவரம் பருப்பு
2)பன்னீர்
*50 கிராம் அளவு துவரம் பருப்பை ஒரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊறவிடுங்கள்.
*பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
*இந்த பேஸ்ட்டை மார்பகங்களில் அப்ளை செய்து காட்டன் துணியை கொட்டு கட்டிக் கொள்ளவும்.இப்படி செய்தால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
தீர்வு 04:
1)புதினா
2)தேன்
3)தண்ணீர்
*முதலில் 10 புதினா இலைகளை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
*பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
*அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.
*இந்த பானத்தில் சிறிது தேன் கலந்து குடித்தால் தாய்ப்பால் சுரப்பது நிற்கும்.
தீர்வு 05:
1)முட்டைகோஸ் இலை
இரண்டு முட்டைகோஸ் இலையை மார்பு மேல் வைத்து கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.