chennai: பொது புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளுக்கு மின் விநியோகம் வழங்க கூடாது என மின்சார வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை சாலைகள் நீர்நிலைகள் வாய்க்கால்கள் ஓடைகள் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்க முடியாது என அரசு அறிவித்துவிட்டது. அவர்களுக்கு நீண்ட ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கிவிட்டனர். இதுதான் அந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களை அகற்ற முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில் இதுபோன்று பொது சாலைகள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்று நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அங்குள்ள மக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் பெருமாள் சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் அங்கு கட்டப்பட்ட 13 கடைகளை அகற்றவும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது என்றும் உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.