CRICKET: அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் ரன் ஆட் ஆக்கிய ஆகாஷ் தீப்.
இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டத்தை முடித்த ஆகாஷ் தீப்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் ஆறுதல் வெற்றியாக மூன்றாவது போட்டியை வெல்லுமா இந்திய அணி என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இத்தொடரின் கடைசி போட்டியான மூன்றாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 86 ரன்களில் 4 விக்கெட் இழந்திருந்தது.
இன்று தொடங்கிய போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிவேக அரைசதம் விளாசி 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சத்தத்தை நெருங்கினார் ஆனால் 90 ரன்களில் அவுட் ஆனார்.
அதன் பின் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி அதிரடியாக ஆடி கொண்டிருந்த நிலையில் ஒரு விக்கெட் மிச்சம் இருந்த நிலையில் ஆகாஷ் தீப் மறுமுனையில் இருந்தார். ஒரு ரன் எடுக்க ஓடும் போது அவர் இரண்டாவது ரன் ஓட முயற்சித்தால் ரன் அவுட் ஆனார். இந்திய அணி ஆட்ட முடிவில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.