உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் விராட் கோலி செய்யும் தவறுகளை மாறி கொள்ள வேண்டும் முகமது கைஃப்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வையடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த நியூசிலாந்து தொடரில் எந்த போட்டியிலும் சரியான ஆட்டத்தினை வெளிபடுத்தாதா நிலையில் தொடர்ந்து இந்த போட்டியிலும் முதல் இன்னிங்சில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் மிட்செல் சான்ட்னர் வீசிய புல் டாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
சராசரியாக விளையாடும் வீரர் கூட ஃபுல் டாஸ் பந்தில் விக்கெட்டை இழக்க மாட்டார்கள் ஆனால் ஜாம்பவான் பேட்ஸ்மேனான விராட் கோலி அவர் வீசிய புல் டாஸ் பந்தில் அவுட் ஆனது அதிர்ச்சியை அளித்தது. இந்த விக்கெட்டை சான்ட்னர் கூட எதிர்பார்க்கவில்லை.
இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் ரன் அதிகம் குவிக்க தேவை இல்லாத நேரத்தில் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இவ்வாறு இவர் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இது குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் விராட் கோலி ஃபுல் டாஸ் பந்தில் பவுல்ட் ஆட் முறையில் விக்கெட் இழந்துள்ளார், மற்றும் தேவையில்லாத ரன் அவுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இது போன்ற தவறுகளை மாற்றி கொள்வது நன்று என்று கூறியுள்ளார்.