உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நீரிழிவு நோயாளிகளாகிவிடுவீர்கள்.நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் இலவங்கப்பட்டை,சின்ன வெங்காயத்தை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த இரண்டு பொருட்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
1)இலவங்கப்பட்டை
2)தண்ணீர்
50 கிராம் பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமியுங்கள்.இந்த பட்டை பொடியை 30 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்.
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.இந்த இலவங்கப்பட்டை தேநீரை தினமும் குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இலவங்கப்பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
1)சின்ன வெங்காயம்
2)தண்ணீர்
முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.
பிறகு அதில் இடித்த சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.