இதய ஆரோக்கியம் மேம்பட.. தினமும் இந்த ஒரு பணத்தை குடித்து வாருங்கள்!!

0
94
To improve heart health.. drink this amount daily!!
To improve heart health.. drink this amount daily!!

நம் உடலில் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இதய அடைப்பு,இதய அழுத்தம்,இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கச் செய்துவிடும்.எனவே கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகளை தவிர்த்துவிட்டு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை சாறு உட்கொள்ளலாம்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

தேவையான பொருட்கள்:

1)மாதுளம் பழம் ஒன்று
2)தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு மாதுளம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதில் உள்ள விதைகளை ஒரு கிண்ணத்தில் சேகரித்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இனிப்பு சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.

இந்த மாதுளை ஜூஸை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து குடித்து வந்தால் இதயம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் அனைத்தும் குணமாகி இதய ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.அது மட்டுமின்றி இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியற்றி இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.இரத்த அழுத்தம் குறைய இரத்த நாள அடைப்பை தடுக்க மாதுளம் பழ சாறு பெரிதும் உதவுகிறது.

Previous articleஉயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த இரண்டு பொருளில் தேநீர் செய்து குடியுங்கள்!!
Next articleதலையில் DANDRUFF அதிகமாக இருக்கா? இந்த இரண்டு பொருட்களை அரைத்து தேயுங்கள்!!