Cricket: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை விட கே எல் ராகுல் ஆட்டம் சிறந்தது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் அணியில் இடம் பெற்றிருந்தார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரில் இந்திய அணி 0-3 என்ற விகிதத்தில் தொடரை இழந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த படுதோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் முதல் போட்டியில் மட்டும் கே எல் ராகுல் விளையாடினார் ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணமாக பிசிசிஐ தெரிவித்தது அவர் சரியாக விளையாடவில்லை.
ஆனால் அந்த அணியில் இடம்பெறும் முக்கிய ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை விட கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார்.விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இணைந்து கடைசி 10 போட்டிகளில் 325 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
ஆனால் கே எல் ராகுல் தனி ஆளாக 339 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களை விட கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஏன் நீக்கப்படவில்லை? ரசிகர்களை பார்த்து வீரர்களை அணி தேர்வு செய்ய கூடாது சிறந்த ஆட்டத்தை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும் என்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.