தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் கூறியது குறித்து அவர் தான் கூற வேண்டும். முதலில் அவரிடம் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேளுங்கள் அவர் தான் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கருத்து வேண்டுமானால் நாங்கள் கூறலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி நடந்த முடிந்த நிலையில் அவர் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் அனைத்து அரசியல் கட்சிகளாலும் பரபரப்பாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மதுரையில் நடந்த செய்தியாளரை சந்தித்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தவெக தலைவர் விஜய் திமுக வை எதிரி என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர் மாநாடு குறித்த உங்கள் கேள்விகளுக்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும். நீங்கள் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்யுங்கள் அதில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேளுங்கள். அந்த கேள்விகளுக்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எங்கள் கருத்து என்னவென்றால் இன்றைக்கு அரசியல் களத்திற்கு வரும் புதிய கட்சிகள் அனைத்தும் களத்திற்கு வரும் முன்னே தைகள் எதிரி யார் என்று முடிவு செய்துதான் வருகிறது. அதுபோலதான் விஜய் திமுக தங்கள் எதிரி என கருதி காலத்துக்கு வந்துள்ளார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.