இந்தியா சீனா மோதல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கோடை கால ராணுவப் பயிற்சி கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டதால், இதனை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சீன ராணுவ வீரர்கள் எல்லையை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கடந்த திங்கள்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரும், சீன ராணுவ வீரர்கள் 35 பேரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக நிர்வாக ரீதியாக பேசி முடிவெடுக்கலாம் என தாமாக முன் வந்து சீனர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.அதில், சீனர்கள் மென்மையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள் என்று சீனா நினைக்க வேண்டாம். இந்தப் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது தக்க பதிலடி கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.