Cricket: 55 வருடங்களுக்கு பின்பு டைகர் பட்டோடி வரிசையில் மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா?
நடந்து முடிந்த இந்தியா- நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியதன் மூலம் இதுவரை 55 ஆண்டுகளாக இல்லாத ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.
இதற்கு முன் இந்திய அணி 1969 ல் டைகர் பட்டோடியின் தலைமையில் ஒரே ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதற்கு பின் ரோஹித் சர்மா தலைமையில் இந்த ஆண்டு இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது இந்த தொடரில் 3 போட்டிகளிலும் வென்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து அணி. இந்த தோல்வி 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்துள்ளது
.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் முதல் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து இந்த நியூசிலாந்து தொடரில் தோல்வியடைந்த நிலையில் இந்த ஆண்டில் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இரண்டாவது கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.
இதற்கு முன் டைகர் பட்டோடி 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். ரோஹித் சர்மா 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். ஆனால் விராட் கோலி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.