இனி டிக்கெட் முன்பதிவு செய்ய இது தான் வழி!! ரெயில்வே நிர்வாகத்தின் அசத்தல் ஐடியா!!

0
87
A new app named Super App!! Railway department takes action at a cost of Rs.100 crore!!
A new app named Super App!! Railway department takes action at a cost of Rs.100 crore!!

தற்பொழுது அனைவரும் ரயிலில் முன்பதிவு செய்வதற்கு ஒரு சில செயலிகளையும் வலைதள பக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே துறை 100 கோடி செலவில் சூப்பர் ஆப் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்’ என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இ – கேட்டரிங்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ரயில் பயணத்தின் போது புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ரயில் மடாட் என்ற செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.முன்பதிவு இல்லா டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பெற, யு.டி.எஸ்., என்ற செயலியும்; ரயில் இயக்கப்படும் விபரங்களை தெரிந்து கொள்ள, என்.டி.எஸ்., என்ற செயலியும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை குறித்து, ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது :-

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது. இது, அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

Previous articleகேப்டன் பதவியை இவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் சொந்த வேலையை பாருங்கள்!! ரோஹித் சர்மாவை விளாசிய கவாஸ்கர்!!
Next articleமாதம் ரூ.1 லட்சம் சம்பளமா? பட்டதாரிகளுக்கு  தமிழக அரசு   அறிவித்த ஹாப்பி  நியூஸ்!!