கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பாம்பை விட்டு கணவனே மனைவியை கொலை செய்த வழக்கில் காவல் துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவரான உத்ரா என்ற பெண்ணிற்கும் சூரஜ் என்ற நபருக்கு திருமணம் ஆகி சுமார் 2 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இரவில் தூங்கி கொண்டிருந்த உத்ராவை பாம்பு கடித்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட அவர் வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த அவரை மீண்டும் பாம்பு கடித்ததாக மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் இரண்டாவது முறையாக பாம்பு கடித்த அவரை இந்த முறை காப்பாற்ற முடியாமல் இறந்தார். இந்நிலையில் தொடர்ந்து எப்படி இரண்டு முறை ஒருவரை பாம்பு கடிக்க முடியும் என்ற சந்தகம் அவரின் பெற்றோருக்கு எழுந்துள்ளது.
இதனால் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்ட உத்ராவின் பெற்றோர் வரதட்சணை கொடுமையால் உத்ராவின் கணவர் சூராஜ் தான் பாம்பைவிட்டு உத்ராவை கொலை செய்திருக்கவேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு மனைவியை தானே கொலை செய்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் பாம்பை விட்டு மனைவியை கொலை செய்ததால் சூரஜ் மற்றும் அவர் பாம்பு வாங்கிய சுரேஷ் என்பவரிடமும் வனத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியதில் மேலும் சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது உத்ராவை கொலை செய்ய கேரளாவில் உள்ள ஆற்றிங்கல் என்னும் பகுதியில் வைத்து அந்த கருநாகப் பாம்பை பிடித்ததாக பாம்பு விற்ற நபரான சுரேஷ் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார்.
மேலும் இத்துடன், சுரேஷ் அங்கிருந்த 10 கருநாக பாம்பு முட்டைகளையும் தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அந்த பாம்பு முட்டைகளை அடைவைத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளதாகவும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.