இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் நீண்ட நாட்களாக எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அணியில் இவர் இடம்பெறவில்லை.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இந்த போட்டியில் இந்திய அணி இதுவரை சொந்த மண்ணில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசியாக 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார் அதன் பின் காயம் காரணமாக வெளியேறினார். நீண்ட நாட்களுக்கு பின் உடல் தகுதி பெற்றதாக கூறியிருந்தார். பின் நியூசிலாந்து தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.
மீண்டும் காலில் வீக்கம் காரணமாக மீண்டும் சிகிச்சை பெற்று ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடும் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து ரஞ்சித் தொடரில் பெங்கால் அணி பட்டியல் வெளியிட்டது அதிலும் ஷமி இடம்பெறவில்லை ரசிகர்கள் அனைவரும் ஷமிக்கு என்னதான் ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.