இந்தியாவில் பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. காடுகளில் மட்டுமின்றி நகரங்களிலும் பாம்புகள் இன்றளவும் வளம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை நேரிலோ அல்லது பல செய்திகளிலோ நம்மால் காண முடிகிறது.
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. pugdundeesafaris என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் அதிக பாம்புகளைக் கொண்ட மாநிலமாக கேரளா விளங்குகிறது. இதே இந்தியாவில்தான் பாம்புகளும் நாய்களும் இல்லாத மாநிலமும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லட்சத்தீவில் 36 தீவுகள் உள்ளன. எனினும் அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தீவுகள், கவரட்டி, அகத்தி, அமினி, காட்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் தீவு போன்றவை ஆகும். இங்குதான் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத தீவும் உள்ளது.
நாட்டிலேயே பாம்புகள் இல்லாத ஒரே மாநிலம் இதுதான். லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி, லட்சத்தீவு பாம்புகள் இல்லாத மாநிலமாகும். இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை. காக்கை போன்ற பறவைகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன, அதுவும் பிட்டி தீவில், சரணாலயமும் உள்ளது. மற்றொரு விஷயம் லட்சத்தீவுகளை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. சிரேனியா அல்லது ‘கடல் பசு’ இந்த தீவில் காணப்படுகிறது, இது அழிந்து வரும் இனமாகவும் உள்ளது.